Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Friday, 18 March 2011

வளர்ச்சி - இடப்பெயர்வு - மறுவாழ்வு



வளர்ச்சிக்கும் அடிப்படை உரிமைகளுக்குமான முரண் தற்போது உலகில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பெரிய அளவில் இன்று நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையை உலகத் தரமான ‘சிங்காரச் சென்னை’யாக மாற்றும் முயற்சியில் குடிசை மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்கிற பெயரில் வீடற்றோர் கட்டாயமாக அகற்றப்படுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளைச் சட்டப்புர்வமாக்கும் திட்டத்துடன் இந்திய அரசு நிலப்பறிப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக புதிய கொள்கை அறிவிப்பு, புதிய சட்டம் இயற்றுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை குறித்த நுண்மையான ஆய்வாக அமைந்துள்ளது இந்நூல்.

நூல்: “சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்”
ஆசிரியர்: அ. மார்க்ஸ்.
விலை : ரூ. 45

Tuesday, 15 March 2011

வன்முறை / எதிர்வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...


பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன் / பின் என இடைக்கோடிட்ட சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில், தமிழகம் குறித்து கட்டமைக்கப்பட்ட அமைதிப் பூங்கா என்ற சித்திரம், கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளால் கலைத்துப் போடப்பட்ட பின்னணியில், அங்கு வாழும் இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார வாழ்வினூடாக வகுப்புவாதத்தின் மூலாதாரத்தையும், வன்முறை மற்றும் எதிர்வன்முறைச் செயல்பாடுகளின் பாதிப்புக் கோரங்களையும் தன்னுடைய மின்னல் எழுத்துக்களால் நெடுங்கதைகளாக... மிர்ஸா காலிபின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலின் வழியாக நம் கண்கள் பனிக்கச் செய்கிறார் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரு குறுநாவல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் கதைத் தொகுப்பு நூல் இது.

இந்நூலுக்கு தோழர். ஆதவன் தீட்சண்யா எழுதிய முன்னுரையை இங்கே சென்று படிக்கலாம். அதனை இங்கும் பதிந்துள்ளோம்.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தமிழில்

இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் (1871) தொடங்கி இன்றைய ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் வரை வழங்கியுள்ள பரிந்துரைகள் முதன் முதலாகத் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.
வகுப்புவாதம் X  மதச்சார்பின்மை குறித்து இந்திய அளவில் நடைபெறும் விவாதங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஆழமாக இந்த அம்சங்களைத் தொட்டுச் செல்கிறது.

பயங்கரவாதம் இந்திய அரசு காவல்துறை


இன்றைய உலகு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்னை பயங்கரவாதம். எத்தகைய அரசியல் நியாயங்கள் இருந்தபோதும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாம் ஏற்க முடியாது. எனில் பயங்கரவாதத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் அபரிமிதமான அதிகாரங்களை வழங்குவது, கருப்புச் சட்டங்களை இயற்றுவது, மனித உரிமைகளை மீறுவதன் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர இயலாது. அரசியல் தீர்வு ஒன்றே வழி என்கிறார் அ. மார்க்ஸ்.